ADDED : ஜூலை 20, 2025 02:17 AM

குற்றச் செயல்களில் இருந்து குடும்ப உறுப்பினர்களை பாதுகாக்க, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்., - எம்.பி., ராகுல் தவறாக பயன்படுத்துகிறார். அவருக்கும், காங்., கட்சிக்கும் குடும்பம் தான் முக்கியம். நாட்டு மக்களின் நலன் பற்றி அக்கட்சித் தலைவர்கள் ஒருபோதும் சிந்தித்து பார்த்ததில்லை.
சுதான்ஷு திரிவேதி, செய்தி தொடர்பாளர், பா.ஜ.,
குரலை நசுக்க முயற்சி!
சத்தீஸ்கரில் உள்ள அனைத்து காடுகளையும் அதானி குழுமத்துக்கு மாநில பா.ஜ., அரசு வழங்கி உள்ளது. காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிராக, சட்டசபையில் காங்., மூத்த தலைவர் பூபேஷ் பாகேல் பேசவிருந்தார். அவரது குரலை நசுக்கவே, அவரது மகன் சைதன்யாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
பிரியங்கா, லோக்சபா எம்.பி., - காங்.
பதவி நீக்க தீர்மானம்!
பண மூட்டை சம்பவத்தில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பார்லி.,யில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. அப்போது, வெறுப்பு பேச்சு விவகாரத்தில் சிக்கிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவுக்கு எதிராகவும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும்.
ஜான் பிரிட்டாஸ், ராஜ்யசபா எம்.பி., - மார்க்.கம்யூ.,

