ADDED : ஜூலை 03, 2025 08:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; பாலக்காடு அருகே, குடும்ப பிரச்னை காரணமாக, பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலம் கீழுர் பகுதியை சேர்ந்தவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சுர்ஜித். இவரது மனைவி சினேகா, 22. தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை வீட்டின் படுக்கை அறையில் சினேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஒற்றைப்பாலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், சினேகாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒற்றைப்பாலம் தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பினர். கணவன் -- மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, சினேகா தற்கொலை செய்துள்ளார் என, போலீசார் தெரிவித்தனர்.