sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 ஜல் போர்டு பள்ளத்தில் பைக்குடன் விழுந்த வாலிபர் உயிரிழப்பு

/

 ஜல் போர்டு பள்ளத்தில் பைக்குடன் விழுந்த வாலிபர் உயிரிழப்பு

 ஜல் போர்டு பள்ளத்தில் பைக்குடன் விழுந்த வாலிபர் உயிரிழப்பு

 ஜல் போர்டு பள்ளத்தில் பைக்குடன் விழுந்த வாலிபர் உயிரிழப்பு


ADDED : பிப் 07, 2026 02:09 AM

Google News

ADDED : பிப் 07, 2026 02:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மேற்கு டில்லி ஜனக்புரியில், டில்லி ஜல் போர்டு கட்டுமானப் பணிக்காகத் தோண்டியிருந்த, 15 அடி பள்ளத்தில் பைக் விழுந்து வாலிபர் உயிரிழந்தார். அதேநேரத்தில், அவரது குடும்பத்தினர் நேற்று முன் தினம் இரவில் இருந்து தேடிக் கொண்டிருந்த நிலையில் நேற்று காலை, 8:00 மணிக்கு உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

தடுப்புகள் டில்லி கைலாஷ்புரியை சேர்ந்தவர் கமல் பயானி, 25. ரோஹிணியில் உள்ள தனியார் வங்கி கால் சென்டர் ஊழியர். நேற்று முன் தினம் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் இரவு முழுதும் தேடினர்.

ந ண்பர்கள் உறவினர்களிடம் விசாரித்தனர். ரோஹிணி, சாகர்பூர், ஜனக்புரி மற்றும் விகாஸ்புரி போலீஸ் ஸ்டேஷன்களிலும் சென்று விசாரித்தனர்.

இந்நிலையில், ஜனக் புரியில் டில்லி ஜல் போர்டு தோண்டி வைத்திருந்த குழிக்குள் பைக்குடன் கமல் விழுந்து கிடப்பது நேற்று காலை 8:00 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

தகவல் அறிந்து, போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். பள்ளத்தில் கி டந்த பைக் மற்றும் கமல் உடல் மீட்கப்பட்டது.

மேற்குடில்லி மாவட்ட போலீஸ் துணைக் கமிஷனர் தரடே சரத் பாஸ்கர் கூறியதாவது:

போ லீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு காலை 8:00 மணிக்கு போன் செய்த ஒரு பெண், ஜனக்புரியில் 15 அடி ஆழமுள்ள பள்ளத்தில் ஒரு வாலிபர் மற்றும் ஒரு பைக் கிடப்பதாக தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றோம். தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜனக்புரியில் டில்லி ஜல் போர்டு தோண்டியிருந்த பள்ளத்தில் இருந்து வாலிபர் உடல் மற்றும் பைக் மீட்கப்பட்டது.

விசாரணையில் அது, கைலாஷ்புரியை சேர்ந்த கமல் பயானி என்பது தெரிய வந்தது. உடற்கூறு ஆய்வுக்காக கமல் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

அந்தப் பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்ததாக டில்லி ஜல் போர்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தச் சாலை சில நாட்களாக மூடப்பட்டுள்ளது. மேலும், கமல் விழுந்த பள்ளமும் நேற்று முன் தினம் தான் தோண்டப்பட்டுள்ளது.

கமல் தினமும் இந்த வழியில் சென்றிருக்கலாம். ஆனால், நேற்று முன் தினம் இரவு வரும் போது இந்தப் பள்ளத்தை கவனிக்காமல் வண்டியுடன் விழுந்திருக்கலாம். விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அழைப்பு கமலின் இரட்டைச் சகோதரரான கரண் பயானி கூறுகையில், “என் சகோதரன் மொபைல் போனில் நேற்று காலை மீண்டும் நான் அழைத்தபோது போலீசார் பேசினர். உடலைக் கண்டுபிடித்துவிட்டதாக கூறினர்.

நாங்கள் சென்றபோது, கமலின் உடலும் அவன் பைக்கும் பள்ளத்தில் கிடந்தது. கமல் எப்படி அந்தப் பள்ளத்துக்குள் விழுந்தான் என தெரியவில்லை. நாங்கள் மூன்று சகோதரர்கள். நானும் கமலும் இரட்டையர். நேற்று முன் தினம் இரவு முதல் அவனைத் தேடிக் கொண்டிருந்தோம்,” என்று கூறி கதறினார்.

கமலின் நெருங்கிய நண்பர் மயங்க் கூறுகையில், “அதிகாரிகளின் அலட்சியத்தால் வாழ வேண்டிய ஒரு வாலிபரை இழந்து விட்டோம்.

இந்தச் சம்பவத்தால் கமலின் குடும்பம் நிலைகுலைந்து விட்டது. கமலுக்கு சிகிச்சை அளித்துவ் வருவதாக அவன் தாயிடம் பொய் சொல்லி இருக்கிறோம். விபத்தாக இருந்தாலும், சரியான நேரத்தில் கண்டுபிடித்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம்.

நேற்று முன் தினம் இரவு, 11:30 மணிக்கு கமலிடம் மொபைல் போனில் பேசினேன். பதினைந்து நிமிடத்தில் வீட்டுக்கு சென்று விடுவதாக கூறினான். ஜனக்புரி போலீசில் புகார் செய்து, கமலின் மொபைல் போன் இருப்பிடத்தை கண்டு பிடித்து தர கோரினோம்.

அவர்கள் கொடுத்த இருப்பிடம் தவறாக இருந்தது. புகார் பதிவு செய்யுமாறு கேட்டோம். காலையில்தான் அதைச் செய்ய முடியும் என்றும், இரவில் தேட முடியாது என கூறி விட்டனர்,” என்றார்.

டில்லி அருகே கிரேட்டர் நொய்டா 150வது செக்டாரில் கடந்த மாதம் 17ம் தேதி காருடன் பள்ளத்தில் விழுந்த சாப்ட்வேர் இன்ஜினியர் யுவராஜ் மேத்தா,27, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

விசாரணைக்கு உத்தரவு

டில்லி அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆஷிஷ் சூட், சம்பவ இடத்தை நேற்று பார்வையிட்டு ஜல் போர்டு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது, நிருபர்களிடம் ஆஷிஷ் சூட் கூறியதாவது: ஜனக்புரியில் ஜல் போர்டு பள்ளத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து உயர்நிலைக் குழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறை, டில்லி ஜல் போர்டு, போலீஸ் இணைக் கமிஷனர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை, 10:00 மணிக்கு சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணையை துவக்குகின்றனர். உயிரிழந்த கமல் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



அரசின் அலட்சியம்: ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள பதிவு: கிரே ட்டர் நொய்டாவில் கடந்த மாதம் தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் காருடன் விழுந்த, 27 வயது பொறியாளர் உயிரிழந்தார். அந்த சம்பவத்தில் இருந்து கூட, பா.ஜ., அரசு எதுவும் கற்றுக் கொள்ளவில்லை. அரசின் அலட்சியம், பொறுப்பற்ற மனப்பான்மையால் சாமானிய மக்கள்தான் உயிரை இழக்கின்றனர். டில்லி பா.ஜ., அரசின் அலட்சியத்தால் தங்கள் மகனை இழந்து த விக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



3 பொறியாளர்கள் 'சஸ்பெண்ட்'

நீர்வளத் துறை அமைச்சர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: டில்லி ஜல் போர்டின் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்த வாலிபர் குடும்பத்துக்கு, ஜல் போர்டு இழப்பீடு வழங்கும். ஜல் போர்டின் செயற் பொறியாளர், உதவிப் பொறியாளர் மற்றும் இள நிலை பொறியாளர் ஆகிய மூன்று பேர் உடனடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இங்கு நடக்கும் பணியின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பது இந்த மூன்று அதிகாரிகளின் கடமை. அங்கு, மூன்று மாதங்களாக வேலை நடக்கிறது. விபத்து ஏற்பட்ட பள்ளம் சம்பவம் நடந்த நேற்று முன் தினம் காலையில் தான் தோண்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us