ADDED : ஜன 10, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாட்டியாலா, பஞ்சாப் - ஹரியானா மாநில எல்லையில் உள்ள ஷம்பு - கனோவ்ரி பகுதியில், விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.
இந்நிலையில், ஷம்பு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தர்ன் தரன் மாவட்டம் பகுவின்ட் பகுதியை சேர்ந்த விவசாயி ரேஷம் சிங், ஒரு ஆண்டாக நடக்கும் போராட்டத்துக்கு அரசு தீர்வு காணாததால், விரக்தி அடைந்து விஷம் குடித்ததாக கூறப்படுகிறது.
அவரை விவசாயிகள் மீட்டு பாட்டியாலாவில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரேஷம் சிங் உயிரிழந்தார்.

