ADDED : ஜன 06, 2024 06:58 AM
பெலகாவி: மனநலம் பாதிக்கப்பட்ட மகளை தொடர்ந்து பலாத்காரம் செய்து, குழந்தை கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெலகாவி பெலவட்டி கிராமத்தில் வசிப்பவர், 45 வயது கூலி தொழிலாளி. இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், மனநலம் பாதிக்கப்பட்ட தன், 16 வயது மகளுடன் வசித்தார்.
தினமும் மது அருந்தி வீட்டிற்கு வந்த அவர், பெற்ற மகள் என்று கூட பாராமல், அவரை பலாத்காரம் செய்து உள்ளார்; இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி தொழிலாளி, யாரிடமும் சொல்லவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன், சிறுமி நிறைமாத கர்ப்பமாக இருப்பது பற்றி, ஆஷா ஊழியர் ஒருவருக்கு தெரிந்தது. இதுகுறித்து அவர், போலீசில் புகார் செய்தார்.
மகளை யாரோ பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கி விட்டதாக, தந்தை நாடகமாடினார். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, குழந்தை பிறந்தது. தொழிலாளி மீதான சந்தேகத்தால், குழந்தைக்கும், தொழிலாளிக்கும், டி.என்.ஏ., பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் தொழிலாளி தான், குழந்தையின் தந்தை என்று தெரிந்தது. இதையடுத்து அவர், கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம், தாமதமாக, தற்போது தான் வெளியாகி உள்ளது. தொழிலாளி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பெலகாவி போலீஸ் கமிஷனர் சித்தராமப்பா கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியை, பெண்கள் பாதுகாப்பு மையத்திலும், குழந்தையை, குழந்தைகள் நல மையத்திலும் அதிகாரிகள் ஒப்படைத்து உள்ளனர்.