தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மகள் பலாத்காரம் தந்தை கைது

மகள் பலாத்காரம் தந்தை கைது

மகள் பலாத்காரம் தந்தை கைது


ADDED : டிச 27, 2024 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2024 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துமகூரு: மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை, போலீசார் கைது செய்தனர்.

துமகூரு, குனிகல்லின் அம்மத்துார் கிராமத்தில் வசிக்கும் தம்பதிக்கு 16 மற்றும் 13 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன், பணி நிமித்தமாக தாயும், இளைய மகளும் வேறு ஊருக்கு சென்றிருந்தனர். மூத்த மகள் வீட்டில் இருந்தார்.

தனியாக இருந்த மகளை, தந்தையே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மனம் நொந்த மகள், தன் தாயை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, நடந்த சம்பவத்தை கூறினார். உடனடியாக நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய தாய், பலாத்காரத்துக்கு ஆளான மகளை மருத்துவமனையில் சேர்த்தார்.

ஈன செயலை செய்த கணவர் மீது, அம்மத்துார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியின் தந்தையை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us