ADDED : அக் 30, 2025 11:28 PM

துபாய் போன்ற நகரங்கள் பீஹார் மக்களின் கடின உழைப்பு மூலம் கட்டமைக்கப்பட்டது. எனினும், கொத்தடிமைகள் போல் பிற மாநிலங்களுக்கு பீஹார் இளைஞர்கள் செல்வது ஏன்? பீஹாரில், சொந்த மக்களுக்கு வேலை கி டைக்காதது ஏன்? பீஹாரில் மாற்றத்தை ஏற்படுத்த பிரதமர் மோடி அஞ்சுகிறார்.
ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,
ராகுல் பேசினால் போச்சு!
 ராகுலின் பேச்சால், காங்கிரசுக்கு தான் பின்னடைவு; வேறு எந்தக் கட்சி தலைவரும் இதுபோல் பேச மாட்டார்கள். இவரது பேச்சால், அக்கட்சியின் நல்ல தலைவர்கள், வெட்கி தலைக்குனியும் நிலை ஏற்பட்டுள்ளது. ராகுல் தொடர்ந்து இதேபோல் பேசினால், அக்கட்சியை மக்கள் மீண்டும் ஆட்சி அமைக்க விட மாட்டார்கள்.
கிரண் ரிஜிஜு மத்திய அமைச்சர், பா.ஜ.,
பா.ஜ.,வின் மாப்பிள்ளை!
பீஹார் சட்டசபை தேர்தலுக்காக முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமாரை, பா.ஜ., பயன்படுத்தி வருகிறது. தேர்தல் முடியும் வரை பா.ஜ.,வின் மாப்பிள்ளையாக அவர் திகழ்வார். ஆனால், தேர்தலுக்கு பின் நிதிஷ் குமார் நிச்சயம் முதல்வர் ஆக மாட்டார்.
அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி

