பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.83 லட்சம் கோடி
பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.83 லட்சம் கோடி
UPDATED : மார் 01, 2026 10:42 PM
ADDED : மார் 01, 2026 10:40 PM

புதுடில்லி: கடந்த பிப்ரவரி மாதம், நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி., வசூல் 8.10 சதவீதம் உயர்ந்து 1.83 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்தாண்டு பிப்ரவரியில் ஜி.எஸ்.டி., வருவாய் 1.70 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் இருந்து கிடைக்கும் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளதே வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
கடந்த மாதம், உள்நாட்டு வரி வருவாய் 5.30 சதவீதம் அதிகரித்து 1.36 லட்சம் கோடி ரூபாயாகவும்; இறக்குமதி வரி வருவாய் 17.20 சதவீதம் உயர்ந்து 47,837 கோடி ரூபாயாகவும் இருந்தது.
மொத்தம் 22,595 கோடி ரூபாய்க்கு ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த மாதத்துக்கான ஜி.எஸ்.டி., வசூல் 18 சதவீதம் அதிகரித்து 6,811 கோடி ரூபாயாக உள்ளது.

