sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மகளிர் தினத்தில் விருது பெற்ற பெண் இன்ஜினியர்

/

மகளிர் தினத்தில் விருது பெற்ற பெண் இன்ஜினியர்

மகளிர் தினத்தில் விருது பெற்ற பெண் இன்ஜினியர்

மகளிர் தினத்தில் விருது பெற்ற பெண் இன்ஜினியர்


ADDED : நவ 09, 2024 11:08 PM

Google News

ADDED : நவ 09, 2024 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணெய் மாவட்டத்தின் தலைநகரான தாவணகெரேயில், கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில், பல வகையான எண்ணெய் விற்பனை செய்யும் 'சார்வி அத்தன்டிக்' என்ற கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் நளினி பூர்ணா, இன்ஜினியரிங் பட்டதாரி.

பாரம்பரிய முறையில் எண்ணெய் தயாரித்து அதை விற்பனை செய்து வருகிறார். பெண்களுக்கும் வேலை கொடுத்துள்ளார்.

எண்ணெய் விற்பனையில் சாதிப்பது குறித்து நளினி பூர்ணாவின் மனம் திறந்த பேட்டி:

நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன். சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களிலிருந்து எண்ணெய் தயாரிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன்.

கடந்த 2021ல் பிரதான மந்திரி மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ், மாநில அரசின் விவசாய துறைத் திட்டத்தின் கீழ், 20 லட்சம் ரூபாய் கடன் கிடைத்தது. ஐந்து அரவை இயந்திரங்களை வாங்கினேன்.

விவசாயிகளிடமிருந்து, சூரியகாந்தி, தேங்காய், எள், கடுகு, குங்குமப்பூ, பாதாமி, ஆமணக்கு உள்ளிட்ட விளைபொருட்களை வாங்கி, இயந்திரங்களில் போட்டு அரைத்து எண்ணெய் எடுக்கிறேன்.

மத்திய, மாநில அரசுகளின் உதவியால் எண்ணெய் உற்பத்தியில் சாதித்து வருகிறேன். இதற்காக எனக்கு உதவிய அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்களுக்கு சுத்தமான எண்ணெய் வழங்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். 5 கிலோ சூரியகாந்தி பூவை இயந்திரத்தில் போட்டு அரைத்தால், ஒரு லிட்டர் சன் பிளவர் ஆயில் கிடைக்கும்.

விவசாயிகளிடமிருந்து விளை பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்கிறேன். எனது நிறுவனத்தில் 20 பெண்களுக்கும் வேலை வழங்கியுள்ளேன்.

பெண்களும் சுயதொழில் துவங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது எனது ஆசை.

உணவுப் பொருளான எண்ணெய் சுத்தமான முறையில் தயாரித்து கொடுத்ததற்காக, இந்த ஆண்டு மகளிர் தினத்தின்போது, மத்திய அரசிடம் இருந்து எனக்கு விருது கிடைத்தது.

இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us