தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பெண் பூசாரி தற்கொலை

பெண் பூசாரி தற்கொலை

பெண் பூசாரி தற்கொலை


ADDED : அக் 04, 2024 12:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 12:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராய்ச்சூர் : ராய்ச்சூர் அருகே டோங்கராமபுரா கிராமத்தில் வசித்தவர் மஞ்சுளா, 42. கிராமத்தில் உள்ள பரமேஸ்வரர் கோவிலில் பூசாரியாக இருந்தார். கோவிலின் அருகே குடிசை அமைத்து தனியாக வசித்து வந்தார்.

தினமும் காலை 5:00 மணிக்கு கோவிலுக்கு சென்று விடுவார். நேற்று காலை நீண்ட நேரம் ஆனபோதிலும் அவர் கோவிலுக்கு வரவில்லை.

சந்தேகம் அடைந்த பக்தர்கள், குடிசைக்கு சென்று பார்த்தபோது துாக்கில் சடலமாக தொங்கினார். மஞ்சுளா இறந்தது பற்றிய தகவல் கிடைத்ததும் மக்கள் குடிசையின் முன்பு கூடி நின்று கதறி அழுதனர்.

யாப்பலதினி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மஞ்சுளாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us