ADDED : அக் 06, 2024 08:41 PM
விவேக் நகர்:
வரதட்சணை கொடுமையால், பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் கைது செய்யப்பட்டார்.
உடுப்பியின் குந்தாபூரை சேர்ந்தவர் மேகனா ஷெட்டி, 27. ஷிவமொகாவின் தீர்த்தஹள்ளியின் சுதீப் ஷெட்டி, 29. இருவரும் இன்ஜினியர்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பின் இருவரும், பெங்களூரு விவேக்நகரில் வாடகை வீட்டில் வசித்தனர்.
கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி, கடந்த சில மாதங்களாக மேகனாவை, சுதீப் கொடுமைப்படுத்தினார்.
இதுபற்றி மேகனா பெற்றோரிடம் கூறி இருக்கிறார். நேற்று முன்தினம் இரவும், தம்பதிக்குள் சண்டை நடந்து உள்ளது. மனம் உடைந்த மேகனா, படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகளை கொன்று துாக்கில் தொங்கவிட்டதாக, சுதீப் மீது விவேக்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அவர் கைது செய்யப்பட்டார். விசாரணை நடக்கிறது.