நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தார்வாட்:
பெண் கொலை 5 பேருக்கு 'ஆயுள்'
தார்வாட் டவுன் ஹேவர்பேட்டில் வசித்தவர் கங்கம்மா கடம், 56. இவரது பக்கத்து வீட்டில் வசித்தவர் லலிதா கடம். கங்கம்மா வீட்டின் பின்றம், லலிதா குப்பை கொட்டினார். இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 2016 பிப்ரவரி 11ம் தேதி ஏற்பட்ட தகராறில், கங்கம்மாவை, லலிதா, அவரது உறவினர்கள் மஞ்சுநாத், பசவராஜ், யல்லப்பா, கமலா ஆகியோர் கோடரியால் வெட்டி கொன்றனர்.
இந்த வழக்கில் 5 பேருக்கும் ஆயுள் தண் டனை விதித்து மாவட்ட 4 வது கூடுதல் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

