UPDATED : டிச 23, 2024 10:33 PM
ADDED : டிச 23, 2024 08:55 PM

மும்பை: தேசிய விருது பெற்ற பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், 90, உடல் நலக்குறைவால் இன்று மும்பையில் காலமானார்.
தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் கதையாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்தவர். 1970களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். தன் வாழ்நாளில் 18 தேசிய விருதுகளை வென்றவர்.
இவரது படங்கள் அனைத்தும்,
வாழ்வின் எதார்த்தமான கதை அம்சம் கொண்டதாக இருக்கும்.
அங்கூர், நிஷாந்த், மந்தன், பூமிகா, ஜூனுான் மற்றம் மண்டி போன்ற சாதனை திரைப்படங்களை இயக்கியவர் ஷியாம் பெனகல்.
பெனகல், குஜராத்தில் முதல் குறும்படத்தை உருவாக்கினார்.
இந்திய திரைப்படத்துறையை உலக அளவில் கொண்டு சென்ற மிகச் சிறந்த திரைப்பட இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் ஷியாம் பெனகல். அவரது முதல் படமான அங்கூர் (1974) முதல் ஜுபைதா (2001) வரை, அவரது படங்களில் நாயகிகளுக்கு தனி முக்கியத்துவம் இருக்கும்.
திரைப்படத்துறையில் இவரது சேவையை பாராட்டி, இந்திய அரசு, 1976ல் பத்மஸ்ரீ விருதும் 1991ல் பத்மபூசன் விருதும் 2005ல் தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கி மரியாதை செய்தது. 2013ல் இவருக்கு ஏ.என்.ஆர் தேசிய விருது வழங்கப்பட்டது.
இவர், 2006-பிப்- முதல் 2012-பிப்15 வரை ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
ஷியாம் பெனகல் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு,மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் காலமானார்.