UPDATED : செப் 05, 2024 07:37 PM
ADDED : செப் 05, 2024 07:01 PM

சென்னை: ஊறுகாய் போட்டவர் நிதி அமைச்சர் பதவி வகிக்க கூடாதா ? என்னை பொறுத்தவரை ஊறுகாய் போடுவதையும், நிதியமைச்சராக பதவி வகித்து மக்களுக்கு சேவையாற்றுவதையும் நான் ஒருபோதும் கவுரவ குறைச்சலாக பார்ப்பது இல்லை என நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறினார்.
வருவாய் வரி தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியது,
வருமான வரி செலுத்தும் நடைமுறையை எப்படி எளிமைப்படுத்துவது, எப்படி இலகுவாக்குவது என்பதைப்பற்றி ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத்திலும் ஆலோசித்து ஒவ்வொன்றாக அமல்படுத்தி வருகிறோம்.
இன்றைய சூழலில் ஜி.எஸ்.டி.யில் இவ்வளவு மாற்றதை கொண்டு வருவதற்கு நாடு தயாராக உள்ளதா என நாம் பேசினாலே பதில் கிடைத்துவிடும். டிஜிட்டல் வெற்றி வாயிலாக எதிர்பாராத இடத்தில் உள்ளோம். டிஜிட்டல் பொருளாதாரத்தின் வெற்றி தான் இன்று சந்தையை உருவாக்குகிறது. டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சி இந்தியாவில் அபரிமிதமாக வளர்ச்சி கண்டு வருகிறது. அதன் காரணமாக, நொடிப்பொழுதில் இந்தியாவில் இருந்து எங்கு வேண்டுமென்றாலும் பணம் அனுப்ப முடிகிறது. இதை பற்றி நாம் எடுத்துச்செல்ல வேண்டும்.
140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 1.47 கோடி பேர் மட்டுமே ஜிஎஸ்டி வரி செலுத்துகின்றனர். நேரடி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 7.79 கோடி வருவாய் மத்திய அரசுக்கு கிடைக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. ஆனால், 10 பேர் உண்மையான தகவல்களை பரப்புகின்றனர் என்றால் 100 பேர் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.
இன்னும் அதிகமாக பேசினால் ஊறு போட்டவர் எல்லாம் அமைச்சராக வேண்டுமா என்கின்றனர். இப்படி நாம் நாட்டு மக்களையே இழிவாக பேசினால், ஊறுகாய் போட்டவர் நிதி அமைச்சராக வரக்கூடாதா, அப்படி ஒரு சட்டம் இருக்கா ? “ஊறுகாய் போடுவதை ஒருபோதும் கவுரவக் குறைச்சலாக பார்ப்பதில்லை” . அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.