ADDED : நவ 07, 2025 01:25 AM
புதுடில்லி:தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உரிய மாசுபாடு சான்றிதழ் இல்லாமல் இயங்கியதற்காக ஜனவரி முதல் அக்டோபர் வரை 4.87 லட்சம் வாகனங்களின் உரிமையாளர்கள் டில்லி காவல் துறைக்கு அபராதம் செலுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.78 லட்சம் வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகரின் காற்று மாசுபாடு மோசமடைந்து வரும் நிலையில் வாகன ஓட்டிகளிடம் மாசுபாடு சான்றிதழை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
அக்டோபர் 30ம் தேதி வரை நடந்த ஆய்வில் மட்டும், இந்த ஆண்டு, உரிய மாசுபாடு சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 8.87 லட்சத்திற்கும் அதிகமான உரிமையாளர்களுக்கு போலீசார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
தவிர, திறந்தநிலையில் சிமென்ட், மணல், துாசி உள்ளிட்டவற்றை ஏற்றிச் சென்ற 941 வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆயுட்காலம் முடிந்தும் இயங்கிய 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

