திருப்பதியில் லட்டு விநியோகிக்கும் மையத்தில் திடீர் தீ!
திருப்பதியில் லட்டு விநியோகிக்கும் மையத்தில் திடீர் தீ!
ADDED : ஜன 13, 2025 04:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பதி; திருப்பதியில் லட்டு விநியோகிக்கும் கவுன்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன முன்பதிவின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.
இந் நிலையில் திருப்பதியில் லட்டு விநியோகிக்கும் கவுன்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 47வது எண் கொண்ட கவுன்டரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. தீ விபத்தை தொடர்ந்து கடும் புகை எழுந்ததால் பக்தர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை. இருப்பினும் இதற்கு மின் கசிவே காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ விபத்து பற்றிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.