எம்.பி.,க்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ : டில்லியில் பரபரப்பு
எம்.பி.,க்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ : டில்லியில் பரபரப்பு
UPDATED : அக் 18, 2025 04:36 PM
ADDED : அக் 18, 2025 02:42 PM

புதுடில்லி: டில்லியில் உள்ள எம்.பி. குடியிருப்பில் இன்று தீ ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணி முழு வீட்டில் நடக்கிறது.
டில்லியில் பி.டி. மார்க்கில் உள்ள பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் ராஜ்ய சபா எம்பிக்கள் வசிக்கின்றனர். 2020ம் ஆண்டு இந்தக் கட்டடம் புதிதாக கட்டி திறந்து வைக்கப்பட்டது.
பார்லிமென்டிற்கு 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு, பார்லி உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ குடியிருப்புகளில் ஒன்றாகும்.
குடியிருப்பு வளாகத்தின் மேல் தளங்களில் ஒன்றில் இன்று தீ ஏற்பட்டது, இதனால் அங்கு குடியிருப்பவர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
தீயணைப்பு அதிகாரி பூபேந்திர பிரகாஷ் கூறியதாவது: அடுக்குமாடி குடியிருப்பில் தீ பற்றியதாக மதியம் 1:22 மணிக்கு எங்களுக்கு தகவல் வந்தது, நாங்கள் சம்பவ இடத்தை அடைந்தோம். மேல் தளங்கள் கூட சேதமடைந்துள்ளன. தீ விபத்துக்கான காரணம் குறித்து டில்லி போலீசார் விசாரணை நடத்துவார்கள். எங்கள் தீயணைப்புப் படை தொடர்கிறது; உயிரிழப்பு எதுவும் இல்லை, தீ கட்டுக்குள் உள்ளது. இவ்வாறு பூபேந்திர பிரகாஷ் கூறினார்.
பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், 'என் நாய் உள்ளே சிக்கிக்கொண்டது. என் மகளுக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க உள்ளது, நாங்கள் வாங்கிய நகைகள், தங்கம் மற்றும் துணிகள் அனைத்தும் உள்ளே உள்ளன.
என் மனைவி மற்றும் என் குழந்தைகளில் ஒருவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் மருத்துவமனையில் உள்ளனர். தீ எப்படி தொடங்கியது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. என் வீடு மூன்றாவது மாடியில் உள்ளது,' என்றார்.