ADDED : அக் 16, 2024 08:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாடல் டவுன்:டில்லியின் மாடல் டவுனில் உள்ள கட்டடத்தில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது.
வடமேற்கு டில்லியின் குஜ்ரா வாலா டவுன் பகுதியில் உள்ள கட்டடத்தில் நேற்று முன்தினம் காலை 8:30 மணியளவில் தீ பற்றியதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் வந்தது. ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
ஒரு மணி நேரத்தில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சேதம் குறித்து உடனடியாக தகவல் இல்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

