ADDED : நவ 15, 2024 09:14 PM
புதுடில்லி:முண்ட்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.
முண்ட்காவில் கடந்த 13ம் தேதி நள்ளிரவில், சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது..
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், புகார் செய்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் மது போதையில் இருந்ததால், தெளிவாக பேசவில்லை. ஆனால், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டவில்லை. அங்கிருந்து இரண்டு துப்பாக்கிக் குண்டுகளை போலீசார் மீட்டனர். தடயவியல் மற்றும் குற்றவியல் குழுக்கள் அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
அங்கு துப்பாக்கியால் சுட்டு மோதிக் கொண்டவர்கள் குறித்து அறிய, அங்குள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இதுகுறித்து, முண்ட்கா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.