குளிர் காய்ந்து கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு
குளிர் காய்ந்து கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு
ADDED : டிச 13, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திரிலோக்புரி: கிழக்கு டில்லியில் தனிப்பட்ட விரோதம் காரணமாக ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
திரிலோக்புரி, பிளாக் 13ல் வசித்து வந்தவர் ரவி. நேற்று முன் தினம் இரவு தன் வீட்டின் அருகே நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், ரவியை வம்புக்கு இழுத்து சண்டை போட்டுள்ளது.
திடீரென அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. பல குண்டு காயங்கள் ஏற்பட்டு, மேக்ஸ் மருத்துவமனையில் ரவி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாமென போலீசார் சந்தேகிக்கிறார்கள்.