ADDED : நவ 06, 2024 02:14 AM
புவனேஸ்வர்,
டில்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசாவின் பூரிக்கு, வாரத்திற்கு நான்கு நாட்கள் நந்தன் கானன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
டில்லியில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட ரயில், ஒடிசாவின் பத்ராக் ரயில் நிலையத்தை நேற்று காலை கடந்தபோது, அந்த பகுதியில் நின்றிருந்த மர்ம நபர் ரயில் பெட்டியின் மீது துப்பாக்கியால் சுட்டார்.
இந்த குண்டுகள் ரயில் மேலாளர் இருக்கும் கடைசி பெட்டியின் ஜன்னல் கண்ணாடியை துளைத்தன. இதில் கண்ணாடி சேதமடைந்தது. சத்தம் கேட்டு வந்து பார்த்த ரயில் மேலாளர், ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் விரைந்து வந்து அடுத்த ரயில் நிலையத்தில் ரயிலை சோதனையிட்டனர். ஆபத்து இல்லை என்பதை உறுதி செய்த பின் ரயில் செல்ல அனுமதித்தனர். ஒன்றரை மணி நேர தாமத்திற்கு பின் ரயில் புறப்பட்டு பூரி சென்று சேர்ந்தது. துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசாருடன் இணைந்து ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.