ரயிலில் முதலிரவு 'செட் - அப்'; டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்
ரயிலில் முதலிரவு 'செட் - அப்'; டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்
ADDED : ஜூலை 10, 2026 02:27 AM

மும்பை: மஹாராஷ்டிராவில், ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியை, முதலிரவு அறை போல் அலங்காரம் செய்திருந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அந்த பெட்டியின் டிக்கெட் பரி சோதகரை ரயில்வே நிர்வாகம் 'சஸ்பெண்ட்' செய்துள்ளது.
மஹாராஷ்டிராவின் பல்ஹார்ஷாவில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி மஹராஜ் ரயில் நிலையத்திற்கு 'நந்திகிராம்' விரைவு ரயில் சமீபத்தில் சென்றது.
இந்த ரயிலின், 'கூபே' எனப்படும் இருவர் மட்டும் பயணிக்கும் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் புதுமண தம்பதி பயணம் செய்தனர்.
தங்கள் பயணத்தை, மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியை, முதலிரவு அறை போல் அலங்கரிக்க ஏற்பாடு செய்தனர். இதற்காக ஜால்னா ரயில் நிலையத்தில், தனியார் கான்ட்ராக்டரை வரவழைத்து, அலங்காரம் செய்தனர். மலர் அலங்காரம் செய்யப்பட்டதுடன், வண்ண பலுான்களும் வைத்திருந்தனர். இதுதொடர்பான வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதற் கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், முன்பதிவு பெட்டிக்குள் அனுமதியின்றி வெளியாள் நுழைந்தது விதிமீறலாகக் கருதி, அந்த ரயில்பெட்டியின் டிக்கெட் பரிசோதகர் மீது ரயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், துறை ரீதியா ன விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் ரயிலின் முன்பதிவு அறையை அலங்காரம் செய்த நபர் மீதும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
