ADDED : மே 04, 2024 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: லோக்சபா தேர்தலில் தெற்கு டில்லி லோக்சபா தொகுதியில் நேற்று முதன்முறையாக திருநங்கை வேட்புமனு தாக்கல் செய்தார். ஏழுகட்டங்களாக நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் இரு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளன.
இந்நிலையில் தெற்கு டில்லி லோக்சபா தேர்தலில் போட்டியிட நேற்று ராஜன்சிங் என்ற 26 வயது திருநங்கை வேட்புமனு தாக்கல் செய்தார். டில்லி ஷாகேட் என்ற இடத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தாம் பீஹாரைச் சேர்ந்தவன் எனவும், இங்கு பல ஆண்டுகளாக வசி்த்து வருவதாகவும் கூறினார். வேட்புமனுவுடன் தன்னிடம் அசையா சொத்துக்கள் இல்லை, அசையும் சொத்தாக ரூ. 1 லட்சம் கையில் இருப்பதாவும், 200 கிராம் தங்கம், வங்கி கணக்கில் ரூ. 10 ஆயிரம் இருப்பு உள்ளதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.