sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருப்பதி லட்டு பிரசாதத்தில் மீன் எண்ணெய் - மாட்டு கொழுப்பு- பன்றி கொழுப்பு : ஆய்வறிக்கை சொல்வது இதைத்தான்

/

திருப்பதி லட்டு பிரசாதத்தில் மீன் எண்ணெய் - மாட்டு கொழுப்பு- பன்றி கொழுப்பு : ஆய்வறிக்கை சொல்வது இதைத்தான்

திருப்பதி லட்டு பிரசாதத்தில் மீன் எண்ணெய் - மாட்டு கொழுப்பு- பன்றி கொழுப்பு : ஆய்வறிக்கை சொல்வது இதைத்தான்

திருப்பதி லட்டு பிரசாதத்தில் மீன் எண்ணெய் - மாட்டு கொழுப்பு- பன்றி கொழுப்பு : ஆய்வறிக்கை சொல்வது இதைத்தான்

41


ADDED : செப் 19, 2024 08:12 PM

Google News

ADDED : செப் 19, 2024 08:12 PM

41


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி: திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது தொடர்பான சமீபத்திய ஆய்வறிக்கை வெளியாகியுள்ளதன் மூலம் குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளில் கொழுப்பு கலப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை மதிக்காததை கண்டு முந்தைய முதல்வர் ஜெகன்மோகனும், அவரது கட்சியும் அவமானப்பட வேண்டும் என்றார். இவரது பேட்டி பக்தர்களை அதிர்வடைய செய்துள்ளது.

இது தொடர்பாக தெலுங்கு தேச கட்சியின் வெங்கடரமண ரெட்டி வெளியிட்ட அறிக்கையில்,

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் மாதிரிகுஜராத்தில் உள்ள தேசிய கால்நடை ஆராய்ச்சி, ஆய்வுக்கூடத்தில் கடந்த ஜூலை மாதம் பரிசோதனை செய்யப்பட்டதில் தரமற்ற நெய் விநியோகிக்கப்பட்டுள்ளது, அதில் மீன் எண்ணெய், பன்றியின் கொழுப்பு, மாட்டு கொழுப்பு, பாமாயில், சோயா எண்ணெய் ஆகியன கலந்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

தேவஸ்தான செயல் அதிகாரி கூறியது, கடந்த இரு மாதங்களுக்கு முன் 8.5 லட்சம் கிலோ நெய் விநியோகம் கோரி விடப்பட்ட டெண்டரில் அந்த டெண்டர் நிறுவனம் 68 ஆயிரம் கிலோ நெய் சப்ளை செய்ததில் 20 ஆயிரம் கிலோ நெய் தரமற்றதாக உள்ளதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்தி நெய் சப்ளை நிறுத்தப்பட்டு, டெண்டர் நிறுவனம் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது என்றார்.

ஜெகன் மறுப்பு


முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஓய்.எஸ்.ஆர். காங். கட்சியின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறுத்துள்ளார்.

ஓய்.எஸ்.ஆர்.,கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருமலையின் புனிதத்தையும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் புண்படுத்தியுள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. லட்டு பிரசாதம் தொடர்பாக நாயுடுவின் கருத்துக்களில் உண்மையில்லை. அரசியலுக்காக எந்த மட்டத்திலும் இறங்க தயங்கமாட்டார் என்பது நிரூபணமாகியுள்ளது. என்றார்.






      Dinamalar
      Follow us