ADDED : நவ 25, 2025 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டேராடூன்: உத்தரகண்டின் டேரிஹர்வால் பகுதியில், பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் ஐந்து பக்தர்கள் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசம், பஞ்சாப், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களச் சேர்ந்த, 29 பக்தர்கள் உத்தரகண்டில் உள்ள ரிஷிகேஷுக்கு பஸ்சில் ஆன்மிக பயணம் சென்றனர்.
அங்குள்ள சதானந்த் ஆஸ்ரமத்தில் தரிசனம் முடித்துவிட்டு கடல் மட்டத்தில் இருந்து, 5,498 அடி உயரத்தில் உள்ள மா குஞ்சாபுரி கோவிலுக்கு நேற்று திரும்பினர்.
நரேந்திர நகர் அருகே மலைப்பாதையில் ஓரிடத்தில் பஸ்சை நிறுத்திய டிரைவர் பின்னால் எடுத்தார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், 230 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், ஐந்து பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 13 பேர் காயம் அடைந்தனர்.

