வீட்டில் காஸ் வெடித்து ஒரே குடும்பத்தின் ஐவர் காயம்
வீட்டில் காஸ் வெடித்து ஒரே குடும்பத்தின் ஐவர் காயம்
ADDED : ஜன 29, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி: பெலகாவி நகரின், பசவனகல்லியில் வசிப்பவர் கோபி கிருஷ்ணா பட், 84. நேற்று மதியம் இவரது வீட்டின் சமையல் காஸ் சிலிண்டரில், காஸ் கசிந்தது. இதை கவனிக்காமல், வீட்டிலிருந்த யாரோ, லைட்டரால் ஸ்டவ்வை பற்ற வைத்தபோது, சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதில் தீப்பிடித்ததில், கோபி கிருஷ்ணா பட், 84, கமலாட்சி பட், 80, மோகன் பட், 56, ஹேமந்த் பட், 27, லலிதா பட், 48, ஆகியோர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புப் படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.
கடே பஜார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.