ம.பி.,யில் வேன் மீது டிப்பர் லாரி மோதி விபத்து; 5 பேர் பரிதாப பலி
ம.பி.,யில் வேன் மீது டிப்பர் லாரி மோதி விபத்து; 5 பேர் பரிதாப பலி
ADDED : பிப் 18, 2025 08:46 AM

போபால்: மத்தியப் பிரதேசத்தில் வேன் மீது டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த, வேன் மீது டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 12 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்தவர்கள் ஜவஹர்புரா கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் திருமண விழாவில் பங்கேற்று விட்டு, வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது செல்லும் வழியில் சாலையோரம் வேன் நிறுத்தப்பட்டுள்ளது. சிலர் வேனில் அமர்ந்து இருந்தனர். மற்றவர்கள் சாலையோரம் இறங்கி நின்று கொண்டு இருந்துள்ளது. அந்த வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி வேகமாக வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.