ADDED : ஜன 26, 2025 05:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமிர்தசரஸ்: குடியரசு தினத்தையொட்டி அட்டாரி - வாகாவில் உற்சாகத்துடன் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று நாட்டின் 76வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மூவர்ண கொடியை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து டில்லி கடமை பாதையில் நம் நாட்டின் பெருமையை விளக்கும் பல்வேறு அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்து பிரம்மிக்க வைத்தன.
இதை கொண்டாடும் விதமாக இந்தியா -பாக். சர்வதேச எல்லையான அட்டாரி-வாகாவில் பாரம்பரிய முறைப்படி இன்று கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரு நாடுகளின் வீரர்களும் அவரவர் எல்லைக்குள் கொடி இறக்கிய நிகழ்வு பல்லாயிரக்கணக்கானோர் தேசபக்தி கோஷம் முழங்க நடந்தது. பி.எஸ்.எப்., வீரர்களின் சாகசம் நடந்தது.