ADDED : ஜூலை 03, 2025 08:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காட்டில், சமூக வனவியல் துறை சார்பில் நேற்று நடந்த 'வன மகோற்சவம்' நிகழ்ச்சியை மாவட்ட ஊராட்சி தலைவர் பினுமோள் துவக்கி வைத்து பேசினார். கிழக்கு வட்ட தலைமை வனப்பாதுகாவலர் விஜயானந்தன் தலைமை வகித்தார்.
வனத்துறை தலைமை வனபாதுகாவலர் உமா, பாலக்காடு வன அதிகாரி ரவிகுமார் மீனா, சமூக வனவியல் துறை உதவி வனப்பாதுகாவலர் சுமு ஸ்கரியா, மாவட்ட கல்வி கண்காணிப்பாளர் வினோத்குமார், புதுப்பரியாரம் ஊராட்சி துணைத்தலைவர் உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, வனவியல் கிளப் ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிலரங்கு நடந்தது.