உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 20, 2026 02:48 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் தண்டனை பெற்ற காங்கிரஸ் முன்னாள் எம்பி சஜ்ஜன் குமார் இன்று காலமானார்.
1984 ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தின் போது ஐந்து பேரை கொலை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாக டில்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.
அவரது மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை மருத்துவமனை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. டில்லியில் இருந்து மூன்று முறை லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட இவர் கடந்த 2018 ம் ஆண்டு தண்டனை கிடைத்த பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
