ADDED : மார் 20, 2024 01:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்காவுக்கான இந்திய துாதராக பணியாற்றியவர் தரன்ஜித் சிங் சந்து, 61. கடந்த ஜனவரியில் அந்த பதவியில் இருந்து ஓய்வுபெற்ற இவர், நேற்று பா.ஜ.,வில் இணைந்தார்.
புதுடில்லியில் பா.ஜ., தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், கட்சியின் பொதுச் செயலர்கள் வினோத் தாவ்டே, தருண் சுக் ஆகியோர் முன்னிலையில் தரன்ஜித் சிங் பா.ஜ.,வில் இணைந்தார். வரும் லோக்சபா தேர்தலில் இவர், பஞ்சாபின் அமிர்தசரஸ் தொகுதியில் இருந்து போட்டியிட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தரன்ஜித் சிங் கூறுகையில், “பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல துறைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. அது போன்ற வளர்ச்சி என் சொந்த ஊரான அமிர்தசரசையும் அடைய வேண்டும்,” என்றார்.

