அடுக்குமாடி வீடு கட்டி தருவதில் ரூ.14,599 கோடி மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் முன்னாள் எம்.டி கைது
அடுக்குமாடி வீடு கட்டி தருவதில் ரூ.14,599 கோடி மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் முன்னாள் எம்.டி கைது
ADDED : நவ 13, 2025 03:58 PM

புதுடில்லி: அடுக்குமாடி வீடு கட்டி தருவதாக கூறி, ரூ.14,599 கோடி மோசடி செய்தது தொடர்பாக, ஜேபி இன்ப்ராடெக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மனோஜ் கவுரை அமலாக்க இயக்குநரகம் கைது இன்று செய்தது.
கடந்த 2017ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜேபி இன்ஃப்ராடெக், அடுக்குமாடி வீடு கட்டுத்தருவதாக கூறி, ஏராளமான பேரிடம் பணம் வசூலித்தது. குறிப்பிட்ட காலத்தில் கட்டி தராததை அடுத்து, டில்லி மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான வீடு வாங்குபவர்களிடமிருந்து கட்டுமானத்திற்காக சேகரிக்கப்பட்ட நிதி திருப்பி விடப்பட்டு தொடர்புடைய குழு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு மாற்றப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் எழுந்தது. பாதிக்கப்பட்டவர்கள், புகார்களின் அடிப்படையில், அந்தந்த மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அமலாக்கத்துறை கடந்த மே 23, 2025 அன்று டில்லி, நொய்டா, காசியாபாத், மும்பையில் உள்ள 15 இடங்களில் சோதனை செய்தது.
இந்த சோதனையில் டிஜிட்டல் தரவுகள், நிதி பதிவுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் ஜேபி குழுமத்திற்குள் ஒரு சிக்கலான பரிவர்த்தனை மூலம் நிதியை தவறாக பயன்படுத்தியதில் அதன் நிர்வாகத்தின் முன்னாள் இயக்குநர் மனோஜ் கவுருக்கு முக்கிய பங்கு வகித்தாக தெரியவந்ததை அடுத்து அமலாக்கத்துறை இன்று மனோஜ் கவுரை கைது செய்தது.

