sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் 'மாஜி' எம்.பி.,க்கு சம்மன்

/

 ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் 'மாஜி' எம்.பி.,க்கு சம்மன்

 ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் 'மாஜி' எம்.பி.,க்கு சம்மன்

 ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் 'மாஜி' எம்.பி.,க்கு சம்மன்

1


ADDED : ஜன 19, 2026 02:26 AM

Google News

ADDED : ஜன 19, 2026 02:26 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்: ஆந்திராவில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் 3,500 கோடி ரூபாய் மதுபான கொள்கை ஊழல் வழக்கில், அவரது கட்சியின் முன்னாள் எம்.பி., விஜய்சாய் ரெட்டியை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து உள்ளது. ஆந்திராவில், 2019ல் அப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் மதுபான கொள்கை மாற்றப்பட்டது.

பிரபல பிரா ண்டுகளை ஒதுக்கி, சில மது நிறுவனங்களுக்கு சலுகை அளித்து, புதிய உள்ளூர் பிராண்டுகளை ஊக்குவித்ததாக குற்ற ச்சாட்டு எழுந்தது.

அதன்பின், 2024ல் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் ஆட்சி அமைந்தது. மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரிக்க, எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.

விசாரணையில், மாதம் 50 கோடி ரூபாயை மதுபான நிறுவனங்களிடம் இருந்து லஞ்சமாக பெற்றதாகவும், 3,500 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாகவும் தெரியவந்தது.

இதுவரை இந்த வழக்கில் மூன்று குற்றப்பத்திரிகைகளை எஸ்.ஐ.டி., தாக்கல் செய்துள்ளது. 'இவை அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' என, ஒய்.எஸ்.ஆர்.,காங்கிரஸ் தரப்பில் கூறப் பட்டுள்ளது.

சிறப்பு விசாரணை குழு வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, 20 இடங்களில் சோதனை நடத்தியது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி., மிதுன் ரெட்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் வரும் 22ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,யான விஜய் சாய் ரெட்டிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இவர், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us