முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி
ADDED : மார் 15, 2024 01:02 AM

புனே: முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து,  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் பிரதிபா பாட்டீல், 89. இவர் கடந்த 2007 முதல் 2012 வரை இந்த பதவியை வகித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, மஹாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது:
காய்ச்சல் மற்றும் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல் நிலை தற்போது சீராக உள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அது கூறியது.

