ADDED : மார் 18, 2025 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாய்பாசா : ஜார்க்கண்டின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் கிதிலிபி என்ற கிராமம் உள்ளது. இங்கு, ஓரிடத்தில் நேற்று வைக்கோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் அதில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், குவித்து வைக்கப்பட்டிருந்த வைக்கோலின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது.
அடுத்த சில வினாடிகளில், வைக்கோல் குவியல் முழுதும் தீ பரவியது. இதில், குழந்தைகள் தீயில் சிக்கினர்.
மளமளவென தீ பற்றி எரிந்ததால், அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பலகட்ட போராட்டத்துக்குப்பின் தீ அணைக்கப்பட்டது. தீயில் கருகிய நான்கு குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
இறந்த குழந்தைகள் அனைவரும், 5 வயதுக்கு உட்பட்டவர்கள். வைக்கோலில் திடீரென தீப்பற்றியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.