
பீஹார் மக்கள், இந்த ஆண்டு நான்கு தீபாவளி கொண்டாட உள்ளனர். முதல் தீபாவளி, உ.பி., அயோத்திக்கு ராமர் திரும்பியது. இரண்டாவது, 75 லட்சம் மகளிருக்கு தலா 10,000 ரூபாய் வழங்கியது. மூன்றாவது, ஜி.எஸ்.டி., சீர்திருத்தம். நான்காவது, பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது.
அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
ஓட்டுக்காக பணம்!
கர்நாடகாவில் பெண்களுக்கு உதவித்தொகை அளித்ததை விமர்சித்த பிரதமர் மோடி, பீஹாரில் 10,000 ரூபாய் உதவித் தொகை அளிக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்த உள்ள நிலையில் இத் திட்டத்தை துவக்கி இருப்பது ஓட்டுக்கு ப ணம் அளிப்பதே ஆகும்.
ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்கிரஸ்
மக்களின் பொறுப்பு!
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் பணியில் மத்திய அரசும், பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். எனினும், இங்கு வசிக்கும் மக்களும் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்காமல் வளர்ச்சி பணியையும், வேலைவாய்ப்பையும் உருவாக்க முடியாது.
மனோஜ் சின்ஹா துணைநிலை கவர்னர், ஜம்மு - காஷ்மீர்