ADDED : ஜன 20, 2025 06:51 AM
தங்கவயல்: கொலை வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட 3வது செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பங்கார்பேட்டையின் தம்மேனஹள்ளி கிராமத்தில், கிருஷ்ணமூர்த்தி என்பவரை நிலத் தகராறு காரணமாக கொலை செய்தனர். இக்கொலை வழக்கில் வி.வெங்கடேஷ், 38, கிருஷ்ணப்பா, 40, முனிராஜ், 32. ஆர்.வெங்கடேஷ், 42 ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சுனில் குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
தங்கவயல் நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி கணபதி குருசித்த பாதாமி முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இதில், நான்கு பேருமே குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா 14,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பளித்தார்.