sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மும்பையில் ஜாலியாக 'ஜாகிங்' சென்ற பிரான்ஸ் அதிபர்: வீடியோ வைரல்

/

மும்பையில் ஜாலியாக 'ஜாகிங்' சென்ற பிரான்ஸ் அதிபர்: வீடியோ வைரல்

மும்பையில் ஜாலியாக 'ஜாகிங்' சென்ற பிரான்ஸ் அதிபர்: வீடியோ வைரல்

மும்பையில் ஜாலியாக 'ஜாகிங்' சென்ற பிரான்ஸ் அதிபர்: வீடியோ வைரல்

2


UPDATED : பிப் 17, 2026 03:36 PM

ADDED : பிப் 17, 2026 05:40 AM

Google News

2

UPDATED : பிப் 17, 2026 03:36 PM ADDED : பிப் 17, 2026 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் மேக்ரான், மும்பை மெரீன் டிரைவ் பகுதியில் இன்று 'ஜாகிங்' சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ளார். இது அவரது நான்காவது இந்திய பயணம். இன்று அதிகாலை மும்பை வந்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் அவரது மனைவிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவர் காலையில் தனது பாதுகாப்பு படையினரை மட்டும் அழைத்து கொண்டு, மும்பை மெரீன் டிரைவ் பகுதியில் ஜாலியாக ஜாகிங் சென்றார். அவரை மும்பை வாசிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

மும்பையில் உள்ள லோக் பவனில், பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இன்று சந்திக்கிறார். அப்போது, பாதுகாப்பு, தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. முக்கியமாக, பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து, 'இந்தியா - பிரான்ஸ் இன்னோவேஷன் இயர் 2026' என்ற நிகழ்ச்சியை, இரு தலைவர்களும் துவக்கி வைக்கின்றனர். 19ல், டில்லியில் நடக்கும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிலும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பங்கேற்கிறார்.






      Dinamalar
      Follow us