டிக்கெட் முன்பதிவு முதல் உணவு முன்பதிவு வரை: வருகிறது ரயில்வேயின் 'சூப்பர் ஆப்'
டிக்கெட் முன்பதிவு முதல் உணவு முன்பதிவு வரை: வருகிறது ரயில்வேயின் 'சூப்பர் ஆப்'
UPDATED : நவ 04, 2024 10:33 PM
ADDED : நவ 04, 2024 10:28 PM

புதுடில்லி: ரயில்வேயில் அனைத்து வசதிகளையும் ஒரே செயலியில் அளிப்பதற்கு ஏதுவாக 'சூப்பர் ஆப்' என்ற செயலியை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ரயில்வே மும்முரமாக உள்ளது.
தற்போது ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் செயலியாக ஐஆர்சிடிசியின் 'ரயில் கனெக்ட் செயலி' உள்ளது. பிளாட்பாரம் டிக்கெட், உணவு முன்பதிவுக்கு என தனித்தனியே வேறு செயலிகளை பயன்படுத்த வேண்டும். இது சில பயணிகளுக்கு பல்வேறு அசவுகரியங்களை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், டிக்கெட் முன்பதிவு, முன்பதிவில்லா பெட்டியில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு, பிளாட்பாரம் பாஸ், உணவு, கருத்தை முன்பதிவு செய்ய, பிஎன்ஆர் ஆய்வு, ரயில் காலியிடம், ரயில் நேரம் மற்றும் ரயில் எங்கு செல்கிறது என்பது அனைத்தையும் ஒரே செயலியில் தெரிந்து கொள்வதற்காக 'சூப்பர் ஆப்' என்ற செயலியை ரயில்வே வடிவமைத்து வருகிறது. தற்போது பரிசோதனை முயற்சியில் உள்ள இந்த செயலியில் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வரும் டிச., மாதம் இந்த செயலி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.