உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : செப் 13, 2026 10:15 PM
ADDED : செப் 13, 2026 08:43 PM
அ நிறம் | அளவு
உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தொடக்க உரையாற்றினார். அப்போது, சீன அதிபர் ஷீ ஜின்பிங் அசவுகரியம் ஏற்பட்டது போல் அமர்ந்திருந்தார்; காரணம் தெரியவில்லை. இதை கவனித்த பிரதமர் மோடி, உரையை சில வினாடிகள் நிறுத்தினார். பின், சீன அதிபர் ஜின்பிங்கிடம், 'எல்லாம் சரியாக இருக்கிறதா' என, கேட்டார்; அதை அவர் கவனிக்கவில்லை.
அவரது மொழிபெயர்ப்பாளரிடமும், பிரதமர் மோடி கேட்டார். இதையடுத்து, பிரச்னை ஏதுமில்லை என்பது போல் அதிபர் ஜின்பிங் தலையசைக்க, மோடி தன் உரையைத் தொடர்ந்தார். எல்லை பிரச்னைகளை கடந்து, இரு நாடுகளும் உறவை சீரமைக்க முயன்று வரும் வேளையில், சீன அதிபர் ஜின்பிங் மீதான பிரதமர் மோடியின் தனிப்பட்ட அக்கறையை இது காட்டுகிறது.
