ஜி20 உச்சி மாநாடு: 3 நாடுகள் அரசு முறை பயணம் புறப்பட்டார் பிரதமர் மோடி
ஜி20 உச்சி மாநாடு: 3 நாடுகள் அரசு முறை பயணம் புறப்பட்டார் பிரதமர் மோடி
ADDED : நவ 16, 2024 04:50 PM

புதுடில்லி: நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று புறப்பட்டார்.
நைஜீரியாவில் இரண்டு நாள் தங்கவுள்ள பிரதமர் மோடி, 18, 19 தேதிகளில் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார்.
பிறகு, 19 முதல் 21 தேதிகளில் கயானாவுக்கும் செல்கிறார். 1968க்கு பிறகு கயானாவிற்கு செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைக்கிறது.
அங்கு நடக்கும் CARICOM - INDIA உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
மூன்று நாடுகள் பயணம் செல்லும் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பிரேசிலில் நடக்கும் 19வது ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வேன். கடந்த ஆண்டு, இந்திய மக்களால் வெற்றிகரமாக ஜி-20 உச்சி மாநாடு நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு, பிரேசிலில் நடக்கும் மாநாட்டில் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற நமது பார்வைக்கு ஏற்ப அர்த்தமுள்ள விவாதங்களை எதிர்பார்க்கிறேன்.
பாரம்பரியம், கலாசார மதிப்புகள் அடிப்படையிலான நமது தனித்துவமான உறவை பலப்படுத்துவது குறித்து கருத்துகளை பரிமாறிக்கொள்வோம்.
உச்சிமாநாடு, வரலாற்று உறவுகளை புதுப்பிக்கவும், புதிய களங்களுக்கு நமது ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் உதவும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் கூறியுள்ளார்.