சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / இந்தியா / ஜாமினில் வௌியே வர முடியாது / ஜாமினில் வௌியே வர முடியாது
/
செய்திகள்
ஜாமினில் வௌியே வர முடியாது
ADDED : ஜன 17, 2025 02:03 AM
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:நாடு முழுதும், 2023ல் ஐந்து லட்சம் விபத்துகளில், 1.72 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 66.4 சதவீதம், அதாவது, 1.14 லட்சம் பேர் 18 - 45 வயதுக்கு உட்பட்டோர். சாலை விபத்துகளை தவிர்க்கவும், சுகமான பயணத்துக்காகவும், இவ்வாறு அதிக விபத்துகள் நடக்கும் பகுதிகளில் சாலை மேம்பாட்டுக்கென ஆண்டுக்கு, 40,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.தரமான சாலைகளை அமைக்க அரசு பல கோடி ரூபாய் செலவிடுகிறது. ஆனால், சில கான்ட்ராக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மெத்தனத்தால், சாலைகள் சேதமடைகின்றன. இவ்வாறு மோசமான சாலைகளை அமைக்கும், கான்ட்ராக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு இன்ஜினியர்களை அதற்கு பொறுப்பாக்க வேண்டும். மோசமான சாலைகளால் ஏற்படும் விபத்துகளுக்கு அவர்களை பொறுப்பாக்கி,ஜாமினில் வெளிவர முடியாத குற்றமாக கருதி, தண்டிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.