தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சூதாட்டம் எட்டு பேர் கைது

சூதாட்டம் எட்டு பேர் கைது

சூதாட்டம் எட்டு பேர் கைது


ADDED : செப் 18, 2024 09:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2024 09:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நியூ ராஜேந்தர் நகர்,:மத்திய டில்லியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

நியூ ராஜேந்தர் நகரில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குறிப்பிட்ட இடத்தை போலீசார் முற்றுகையிட்டு அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு சூதாட்டம் நடந்ததை உறுதி செய்த போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 51 லட்ச ரூபாயை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய துணை போலீஸ் கமிஷனர் எம் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us