பீர் கேன்களில் காந்தி படம்: ரஷ்ய நிறுவனத்தால் சர்ச்சை!
பீர் கேன்களில் காந்தி படம்: ரஷ்ய நிறுவனத்தால் சர்ச்சை!
ADDED : பிப் 15, 2025 09:43 PM

புதுடில்லி: ரஷ்ய பிராண்டான ரிவோர்ட் தயாரித்த பீர் கேன்களில் மகாத்மா காந்தி படம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய மது பிராண்டான ரிவோர்ட் தயாரித்த பீர் கேன்களின் படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. இந்த கேன்களில் காந்தி படம் இடம் பெற்றுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
முன்னாள் ஒடிசா முதல்வர் நந்தினி சத்பதியின் பேரன் சுபர்னோ சத்பதி, 'இந்திய அதிகாரிகள் இந்த விஷயத்தை ரஷ்யாவுடன் எடுத்துச் சென்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரியுள்ளார்.
இது குறித்து சுபர்னோ சத்பதி, ''ரிவோர்ட் நிறுவனம் காந்தியின் படத்துடன் பீர் விற்பனை செய்வது அவமரியாதைக்குரிய செயல். இதை, ரஷ்ய அதிபருடன் இந்திய பிரதமர் தொடர்பு கொண்டு பேசி முடிவுக்கு கொண்டு வர வேண்டும்,'' என்று பதிவிட்டுள்ளார்.
அமைதி மற்றும் மதுவிலக்கின் சின்னமான மகாத்மா காந்தியை கேலி செய்வதாக உள்ளது என்றும், இந்தியர்கள் அனைவருக்கும் அவமானம் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்

