14 வயது சிறுமியை கடத்தி இருவரிடம் விற்ற கும்பல் கைது
14 வயது சிறுமியை கடத்தி இருவரிடம் விற்ற கும்பல் கைது
ADDED : செப் 27, 2025 03:01 AM

சூரத்: குஜராத்தில், 14 வயது சிறுமியை கடத்தி சென்று, கடந்த ஐந்து மாதங்களில் இரு நபர்களுக்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. இது தொடர்பாக இரு பெண்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத்தின் சூரத்தை சேர்ந்த சமையல் தொழில் செய்யும் பெண்ணுக்கு, 14 வயதில் மகள் உள்ளார்.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் இந்த சிறுமியை, பக்கத்து வீட்டை சேர்ந்த நுாரி ஷேக், அவரது கணவர் வாசிம், மற்றொரு பெண் பர்ஷானா ஆகியோர் கடத்தி சென்று, சூரத்தின் லஷ்கானா பகுதியை சேர்ந்த சோயிப் என்பவரிடம் திருமணத்துக்காக விற்பனை செய்துள்ளனர்.
துன்புறுத்தல் இதற்காக அவரிடம் மூவரும் 50,000 ரூபாய் பெற்றுள்ளனர்.
இதையடுத்து சோயிப் அந்த சிறுமியை இரண்டு நாட்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
பின் அந்த சிறுமியை அவர்களிடமே திருப்பி அனுப்பிவிட்டார்.
இதையடுத்து 10 நாட்களுக்கு பின் அந்த சிறுமி யை பர்ஷானா மீண்டும் மஹாராஷ்டிராவுக்கு கடத்திச் சென்றுள்ளார்.
அங்குள்ள சோலாப்பூரை சேர்ந்த இளைஞ ரிடம் 2 லட்சம் ரூபாய்க்கு சிறுமியை விற்பனை செய்துள்ளார்.
விசாரணை அந்த நபர், சிறுமியிடம் சில நாட்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சிறுமி அழத்துவங்கியதை அடுத்து, அந்த நபர் அக்கும்பலிடம் சிறுமியை திருப்பி அனுப்பி வைத்தார்.
இதைத்தொடர்ந்து நுாரி, பர்ஷானா உள்ளிட்ட மூவரும் அந்த சிறுமியை வேறு ஒருவருக்கு விற்க முடிவு செய்தனர். இந் நிலையில், சிறுமி கடத்தி செல்லப்பட்டது குறித் து அவரது தாய், போலீசில் புகார் அளித்தார். சிறுமியை கடத்திய பர்ஷானா உள்ளிட்ட மூவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். சிறுமியும் மீட்கப்பட்டார்.
கடத்தலில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கும்பல் வேறு சிறுமியர் யாரையும் கடத்தினார்களா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.