sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குப்பை அள்ளும் ஆட்டோ ஓட்டி முன்மாதிரியாக திகழும் 'துாய்மை வீராங்கனை'

/

குப்பை அள்ளும் ஆட்டோ ஓட்டி முன்மாதிரியாக திகழும் 'துாய்மை வீராங்கனை'

குப்பை அள்ளும் ஆட்டோ ஓட்டி முன்மாதிரியாக திகழும் 'துாய்மை வீராங்கனை'

குப்பை அள்ளும் ஆட்டோ ஓட்டி முன்மாதிரியாக திகழும் 'துாய்மை வீராங்கனை'


ADDED : மார் 09, 2024 10:59 PM

Google News

ADDED : மார் 09, 2024 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமூக சேவையில் பெரும்பாலும் ஆண்கள் இருப்பதை பார்க்கிறோம். குடும்ப வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சமூக சேவையில் பெண்கள் ஈடுபடுவது சற்று குறைவு தான். அதுவும் மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்று முன்வரும் பெண்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இந்த வகையில், சாம்ராஜ்நகர் மாவட்டம், குதேரு பஞ்சாயத்தில், குப்பை அள்ளும் ஆட்டோ ஓட்டுனராக உள்ளவர் மகேஸ்வரி. சமூகத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்.

ஆண்கள் மட்டுமே குப்பை அள்ளும் ஆட்டோக்களை ஓட்டி வரும் இந்த காலத்தில், எதை பற்றியும் யோசிக்காமல், தன்னாலும் முடியும் என்பதை காண்பித்துள்ளார்.

ஆண்கள் வரவில்லை


வீடு, வீடாகச் சென்று குப்பை அள்ளி, அதை ஊருக்கு வெளியே கொட்டி வருகிறார். இதன் மூலம், அப்பகுதி மக்களின் 'துாய்மை வீராங்கனை'யாக திகழ்கிறார். குப்பை அள்ளும் ஆட்டோ ஓட்டுவதற்கு ஆண்கள் யாரும் முன்வரவில்லை.

இதனால், சுய விருப்பமாக தானே ஓட்டுனர் பயிற்சி பெற்றார். துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், குப்பை அள்ளி கிராமத்தினரின் அன்பை பெற்றார். இதன் பின், குப்பை அள்ளும் ஆட்டோவை ஓட்டி வருகிறார்.

கிராமங்கள் துாய்மையாக இருந்தால், நகரங்கள் துாய்மையாக இருக்கும். நகரங்கள் துாய்மையாக இருந்தால், நாடு துாய்மையாக இருக்கும் என்று கிராமம் முழுதும் தினமும் துாய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

திட, திரவ குப்பையை தரம் பிரித்து வழங்கும்படியும்; பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது குறித்தும் அடிக்கடி விளக்கி வருகிறார்.

காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை குப்பை அள்ளும் பணி முடிந்து விடுகிறது.

வாழ்வாதார திட்டம்


அதன்பின், தேசிய வாழ்வாதார திட்டத்தின் கீழ், நிதியுதவி பெற்று, வீட்டிலேயே பைல்களை தயாரிக்கிறார். இதை, மாவட்ட, தாலுகா, கிராம பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு வினியோகித்து சம்பாதித்து வருகிறார்.

வீட்டில் உள்ள பெண்கள், மத்திய அரசின் நிதியுதவிகள் மூலம் என்னென்ன சுயதொழில் செய்யலாம் என்பது குறித்தும் விளக்குகிறார்.

இதுகுறித்து மகேஸ்வரி கூறியதாவது:

விரும்பி தான் குப்பை அள்ளும் பணியை செய்து வருகிறேன். மன நிறைவாக அந்த பணியை செய்கிறேன். குடும்பத்தினரும், கிராமத்தினரும் முழு ஒத்துழைப்பு தருகின்றனர்.

இதனால், கூடுதல் வேலை செய்ய ஊக்கம் அளிக்கிறது.

நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் துாய்மையாக வைத்துக் கொள்வதன் மூலம், நோய்களை அண்ட விடாமல் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us