ADDED : மார் 16, 2024 10:50 PM

ஷிவமொகா:: ஷிவமொகாவில் பள்ளி கல்வி அமைச்சர் மது பங்காரப்பா நேற்று அளித்த பேட்டி:
ஷிவமொகா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும், என் அக்கா கீதா, வரும் 20ம் தேதி முதல் பிரசாரம் துவக்குகிறார். அன்றைய தினம் ஷிவமொகாவில் தொண்டர்கள் கூட்டம் நடக்கிறது. சிவராஜ்குமாரும் பங்கேற்கிறார். கீதாவை ஆதரித்து கிராமப்புற பகுதிகளில், சிவராஜ்குமார் பிரசாரம் செய்வார்.
ஷிவமொகா மாவட்டம் முழுதும் 400 கூட்டங்கள் நடத்த, முடிவு செய்து உள்ளோம். வாக்குறுதித் திட்டங்களை முன்வைத்து, மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்போம். ஷிவமொகா பா.ஜ., - எம்.பி., ராகவேந்திரா, தொகுதியில் எதுவும் செய்யவில்லை.
கீதாவை லோக்சபாவுக்கு அனுப்பினால், ஷிவமொகா மக்கள் குரலாக இருப்பார். கர்நாடகா பா.ஜ.,வில் நிலைமை சரி இல்லை. தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

