திறன் வாய்ந்த இந்திய தொழிலாளர்களுக்கான விசா அதிகரிப்பு: ஜெர்மனி முடிவு
திறன் வாய்ந்த இந்திய தொழிலாளர்களுக்கான விசா அதிகரிப்பு: ஜெர்மனி முடிவு
UPDATED : அக் 26, 2024 04:36 AM
ADDED : அக் 25, 2024 09:35 PM

புதுடில்லி : திறன் வாய்ந்த இந்திய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசாவை 20 ஆயிரத்தில் இருந்து 90 ஆயிரமாக உயர்த்த ஜெர்மனி முடிவு செய்துள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
டில்லி வந்துள்ள ஜெர்மனி அதிபர் ஸ்கால்ப் ஓலஜ் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதன் பிறகு, ஜெர்மன் வணிகத்திற்கான இந்தியா பசிபிக் மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், '' இந்தியாவை சேர்ந்த திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு வழங்கப்படும் விசாவை 20 ஆயிரத்தில் இருந்து 90 ஆயிரமாக உயர்த்த ஜெர்மனி திட்டமிட்டு வருகிறது,''. இவ்வாறு அவர் கூறினார்.
பிறகு ஓலப் ஸ்கால்ஜ் கூறியதாவது: ஜெர்மனி பல்கலையில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் அதிகம் பேர் இந்தியர்கள். கடந்த ஆண்டு, ஜெர்மனியில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை 23 ஆயிரமாக அதிகரித்து உள்ளது. எங்களது தொழிலாளர் சந்தை திறமையானவர்களை வரவேற்கிறது. டிஜிட்டல்மயமாக்கல், விரைவான செயலாக்கம் உதவியுடன் விசா நடைமுறைகளை மேம்படுத்துவதில் ஐரோப்பிய நாடுகள் செயலாற்றி வருகிறது.
அதேநேரத்தில் சட்டவிரோத குடியேற்றத்தை நாங்கள் குறைத்து வருகிறோம். அவர்கள், எங்கள் நாட்டில் தங்குவதற்கு உரிமை கிடையாது. அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம். இது, திறமை வாய்ந்த தொழிலாளர்களுக்கு ஜெர்மனி எப்போதும் வாய்ப்புகளை அளிக்கும் என்ற செய்தியை அனுப்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

