
நான் பல ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்துள்ளேன்; எதிர்க்கட்சி எம்.பி.,யாக எப்படி செயல்பட வேண்டும் என்பது எனக்கு தெரியும். காங்கிரஸ், இன்னும் 40 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக எப்படி இருக்க வேண்டும் என என்னிடம், 'டியூஷன்' எடுத்துக்கொள்ளுங்கள்.
நட்டா, மத்திய அமைச்சர், பா.ஜ.,
நாட்டிற்கே கருப்பு தினம்!
ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட ஆகஸ்ட் 5ம் தேதி, நம் நாட்டிற்கே கருப்பு தினம். இது, அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலின் துவக்கம்; சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கையால், லட்சக்கணக்கானோர் ஓட்டுரிமை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மெஹபூபா முப்தி தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி
முடிவெடுக்க முடியாது!
என் சகோதரர் ராகுல், நம் ராணுவத்தின் மீது அதிக மதிப்பு வைத்துள்ளார். ராணுவத்திற்கு எதிராக எந்த கருத்தையும் அவர் கூறமாட்டார். ராகுல் கேள்வி எழுப்பியது, மத்திய அரசை மட்டுமே. உண்மையான இந்தியர் யார் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்ய முடியாது; அரசை கேள்வி கேட்பது எதிர்க்கட்சிகளின் கடமை.
பிரியங்கா லோக்சபா எம்.பி., காங்கிரஸ்