ஆனந்தநாக் தொகுதியில் போட்டியிடுகிறார் குலாம் நபி ஆசாத்
ஆனந்தநாக் தொகுதியில் போட்டியிடுகிறார் குலாம் நபி ஆசாத்
ADDED : ஏப் 02, 2024 07:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், ஆனந்தநாக் லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலை ஏழு கட்டங்களாக தலைமை தேர்தல் ஆணையம் நடத்திட முடிவு செய்து விரிவாக ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் காங்., முதல்வர் குலாம் நபி ஆசாத் , 2022ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி, ஜனநாயக முற்போக்கு விடுதலை என்ற கட்சியை துவக்கியுள்ளார். இக்கட்சி சார்பில் வரும் லோக்சபா தேர்தலில் ரஜோரி மாவட்டம் ஆனந்தநாக் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

